முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பான ஆட்டம் - பங்களிப்பை அளிக்க வேண்டும்: பண்ட், ஷ்ரேயாசுக்கு மறைமுகமாக கோரிக்கை வைத்த ராகுல் டிராவிட்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என ஷ்ரேயாஸ், ரிஷப் பண்டை தலைமை பயிற்சியாளர் டிராவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரை இழந்தது...

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 3-0 எனவும் இழந்து மோசமான தோல்வியடைந்தது. குறிப்பாக, 3-வ கடைசி ஒருநாள் போட்டியில் நடுக்கள வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மறைமுகமாக...

இந்நிலையில், இந்திய அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டிராவிட், அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யரை மறைமுகமாக சுட்டிக்காட்டினர்.

விரும்புகிறோம்...

இது தொடர்பாக டிராவிட் கூறுகையில், நடுக்கள வீரர்களுக்கு (ரிஷப், ஷ்ரேயாஸ்) நாங்கள் தொடர்ச்சியான வாய்ப்பையும், பாதுகாப்பையும் (அணியில் இடம்பெறும்) கொடுக்க விரும்புகிறோம். அந்த வாய்ப்பையும் பாதுகாப்பையும் கொடுத்த உடன் நான் அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். நீங்கள் இந்த அளவிலான போட்டிகளில் விளையாடும்போது மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடும்போது மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். அது கட்டாயம் அவசியம் தேவையான ஒன்று’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து