முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை நீக்கம்: ஐக்கிய அமீரகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான தடை நீக்கப்படுவதாக ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒமைக்ரான் தோன்றிய 12 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகளை நாளை 29-ம் தேதி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலாண்மை ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனவரி 29 முதல், கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, தென்னாப்பிரிக்கா குடியரசு, போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய மீண்டும் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும். இந்த நாடுகளில் இருந்து நுழைவதற்கான நிபந்தனைகளில் ஐக்கிய அமீரகம் வந்தவுடன் மற்றொரு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் வருகைக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக கோவிட்டுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து