முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமி கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக விளங்குகின்றது. இந்த கோவிலின் பேரை சென்னதும் முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வருவது தேரோட்டம் தான்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக காணப்படும் தியாகராஜர் கோவில் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். இத்தகைய பிரம்மாண்ட தேரோட்டத்தையே நாம் ஆழித்தேரோட்டம் என்று அழைத்து வருகின்றோம். இந்த சிறப்பு மிக்க திருவிழா கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டது.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து  வருவதால் ஊரடங்கு  தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது. இதனை தொடர்ந்து ஆழித்தேரோட்டத்திற்கான ஏற்ப்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் மார்ச் 15-ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் பங்குனி முதல் நாளில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் கொடி மரத்தில் பங்குனி திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமி அம்மாள் பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆழித்தேரோட்டத்தினை காண்பதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் விரைந்து செயல்படுத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து