முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏறிய வேகத்தில் இறங்கியது: தங்கம் விலை சவரனுக்கு 1,136 ரூபாய் குறைந்தது !

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

உக்ரைன் மீது நேற்று முன்தினம் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.1,136 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,472-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உயர்வை நோக்கியே பயணித்தது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்று இருந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கம் விலையில் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலையில் சற்று சரிவை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அதன் விலை சரிந்து கொண்டே வந்து, கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 4-ந்தேதி மீண்டும் உயரத் தொடங்கியது.

அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், ஜனவரி 6-ம் தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்தை கடந்தது. அதையடுத்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டாலும், அவ்வப்போது விலையில் ஏற்றம் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ36 ஆயிரத்து 472 என்ற நிலையில் இருந்து, ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வந்தது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல், போர் தொடுக்கலாம் என்ற சூழல் இருந்ததால், கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம், பவுனுக்கு ரூ.1,856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்தது.  

 

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1136 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.4,809- ஆக விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70க்கு விற்பனையானது. ரஷ்யா மீது உலக நாடுகள் கூடுதல் பொருளாதார தடை விதித்ததன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!