முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவனின் 25 ஆண்டு கால இசைப்பயணம்

திங்கட்கிழமை, 7 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

இசையமைப்பாளராக அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'துள்ளுவதோ இளமை', 'பருத்தி வீரன்', 'கற்றது தமிழ்' என இவரது நீண்ட இசைப்பயணம் 25 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. இதனை ஒட்டி ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னுடன் இசைப் பயணம் செய்த இயக்குநர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி என்றார். திரை இசை உலகில் 25 வருடங்கள் கடந்தது பெரிய விஷயம் என்றும்  நா. முத்துக்குமாரின் இழப்பையும், அவர் வகித்த இடத்தையும் யாரும் இன்னும் நிரப்பவில்லை என்று புகழாரம் சூட்டி அவரை நினைவுகூர்ந்தார். நடிப்புத்துறைக்குள் வருவீர்களா என கேட்டபோது, இசை ஆல்பத்தில் நடிக்க மட்டும் கவனம் செலுத்துவேன், தனியாக படங்களில் நடிக்க விருப்பமில்லை என்றார். 25 வருட பயணம் பற்றி உங்களுடைய தந்தை இளையராஜாவிடம் சொன்னீர்களா என கேட்டதற்கு, 'அத்தனை வருடங்கள் ஆகி விட்டனவா' என அப்பா ஆச்சரியபட்டதாக கூறினார். தன் அம்மாவின் இழப்பையும் அந்த இடத்தையும் தன்னுடைய மனைவியும் மகளும் நிரப்பி வருவதாக  கூறினார் யுவன். லதா மங்கேஷ்கர், பாலசுப்ரமணியம் ஆகியோரை தனது இசையில் பாட வைக்காதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து