முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,248-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்வதும், ஒரு சில நாட்கள் மட்டும் சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ. 808 அதிகரித்து ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரு.40,568-க்கு விற்பனையானது. அதற்கு அடுத்த 3 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.39,080-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 அதிகரித்து,  ஒரு பவுன் தங்கம் ரூ.39,248-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 21 அதிகரித்து ரூ.4,906-க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.74-க்கு விற்பனையானது. நேற்று கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.74.66-க்கு விற்பனையானது. 1 கிலோ பார் வெள்ளி ரு.74,600-க்கு விற்கப்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!