Idhayam Matrimony

விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
Raghupathi 1

சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா?  தேர்தல் வந்துவிட்டால் பிரதமருக்கு உடனடியாக பாசம் வந்துவிடும். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செய்தது என்ன? இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 பேரை கொன்றதை யாரும் மறந்துவிடவில்லை.

 திருச்சி கூட்டத்தில் விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் கபட நாடகம் போட்டுள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. 11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து