முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாணாக்காரன் விமர்சனம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Vikram-Prabhu 2022 04 11

Source: provided

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில், இயக்குநர் தமிழ் இயக்கிய படம் டாணாக்காரன். படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த டாணாக்காரன் டிஸ்னிப் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கதை-போலீஸ் காவலராக தேர்ச்சி பெற்று காவலர் கவாத்து பயிற்சிக்குச் செல்லும் போது அங்குப் பயிற்சி அதிகாரியாக வரும் லால், பெரும் தொல்லைகளை கொடுக்கிறார். அதை எல்லாம் மீறி தந்தையின் ஆசையை விக்ரம் பிரபு நிறைவேற்றினாரா இல்லையா என்பது மீதக்கதை. விக்ரம் பிரபு தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். லால் வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாநாயகி அஞ்சலி நாயருக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். எம்.எஸ் பாஸ்கர் தனது அனுபவத்தை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். லிவிங்ஸ்டன், லிங்கேஷ், பவல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகள், முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் என படத்தை அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் தமிழ். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார். மொத்தத்தில் டாணாக்காரன் போலீஸ் பயிற்சியில் பாசாகிவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து