முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோகோவிச்சை எனக்கு பிடிக்காது : டென்னிஸ் வீரரின் கருத்தால் ரசிகர்கள் ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2022      விளையாட்டு
Djokovic-2022-04-24

Source: provided

ரோம் : இத்தாலி நாட்டை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் அட்ரியானோ பனாட்டா. 1976 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற இவர் டென்னிஸ் அரங்கின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். இவருக்கு தற்போது வயது 71.

இவர் தற்போது செர்பியா நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரரும் உலக தரவரிசையில் முதல் நிலையில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

நோவக் ஜோகோவிச் குறித்து அட்ரியானோ பனாட்டா கூறுகையில், " ரோஜர் பெடரரைப் போன்ற ஒருவரை நான் டென்னிஸ் விளையாட்டில் பின் தொடர்கிறேன் .

நடால் பற்றி கூற வேண்டுமானால் நான் அவருடைய போட்டிகளைப் பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதராக அவரைப் நான் பாராட்டுகிறேன் " என தெரிவித்தார்.

பின்னர் ஜோகோவிச் பற்றி பேசிய பனாட்டா, " தனிப்பட்ட முறையில் அவருடன் பகை எதுவும் இல்லை. ஆனால் எனக்கு அவரை பிடிக்காது  கடந்த இரண்டு வருடங்களில் அவர் கூறிய எந்த ஒரு அறிக்கையும் எனக்கு பிடிக்கவில்லை " என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்து தற்போது நோவக் ஜோகோவிச் ரசிகர்கள் இடையே ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பனாட்டாவிற்கு எதிராக ஜோகோவிச் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து