முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 3,688 பேருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார துறை தகவல்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Corana 2022 03 20

இந்தியாவில் புதிதாக 3,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 26-ம்  தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.  

நேற்று முன்தினம் அதிகபட்சமாக டெல்லியில் 1,607 பேருக்கு தொற்று உறுதியானது. அரியானாவில் 624, கேரளாவில் 412, உத்தரபிரதேசத்தில் 293, மகராஷ்டிராவில் 148, கர்நாடகாவில் 133 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதவிர நேற்று முன்தினம் மகராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மேலும் 50 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,684 ஆக உயர்ந்துள்ளது.   நாடு முழுவதும் இதுவரை 188 கோடியே 89 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  இதற்கிடையே நேற்று முன்தினம் 4,96,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.74 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து