முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாகும்: வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
sun-2022-04-29

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வரும் 4-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடலில் மே 4-ம் தேதி முதல் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்பிருப்பதால் மே 4ல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மத்தியப்பிரதேசம், அரியானா, கிழக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு உத்திரப்பிரதேசம், வட தெலுங்கானாவில் 3 நாளுக்கு வெப்ப அலை வீசும் என்றும்,  மே 3,4-ம் தேதிகளில் வட மாநிலங்களில் புழுதி புயல் வீசக்கூடும் என்றும் மே 2 முதல் 4-ம் தேதி வரை பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் இன்று கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  மேலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து