முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய நாடுகளுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி பயணம் : 8 உலக தலைவர்கள், 50 தொழிலதிபர்களை சந்திக்கிறார்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
modi-1-2021-12-16

Source: provided

புதுடெல்லி : இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, 25 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மூன்று நாடுகளுக்கு செல்லும் அவர் கிட்டத்தட்ட 65 மணி நேரம் அங்கு செலவிடப் போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தை, பல தரப்பு பேச்சுவார்த்தை என பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஏழு நாடுகளை சேர்ந்த எட்டு தலைவர்களை சந்திக்கிறார். அதுமட்டுமின்றி, உலக நாடுகளை சேர்ந்த 50 தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடவுள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாளை 2-ம் தேதி முதல் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நாடுகள் அனைத்து, ரஷ்யாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளன.   முதலில், ஜெர்மனிக்கு செல்லும் மோடி, அங்கிருந்து டென்மார்க்கிற்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர், பயணத்தின் இறுதி நாளான மே 4-ம் தேதி, பாரிஸ் செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!