முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. வரும் மே 9, 10-ல் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது.

6-ம் தேதி முதல்... 

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அரசுத்துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 29-ம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை இடம்பெற்றது. அதன்பிறகு அரசு விடுமுறை வந்ததால் சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் இன்று சட்டசபை கூடுகிறது.

அறநிலையத்துறை...

இன்றைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீது எம்.எல்.ஏ.க்கள் பேச உள்ளனர். 6-ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7ந் தேதி திட்டம், வளர்ச்சி, பொதுசிறப்பு திட்ட செயலாக்கம் நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. 

காவல்துறை மீது...

மே 9, 10 ஆகிய 2 நாட்களில் முதல்-அமைச்சரின் துறையான போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தீயணைப்பு துறை, மதுவிலக்கு உள்துறை சம்பந்தப்பட்டவை குறித்தும் இதில் இடம் பெறுகிறது. போலீஸ் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பேசும்போது அவற்றுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது பதில் அளிப்பார்.

முதல்வர் ஆலோசனை...

அன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன குறைகளை சுட்டிக்காட்டி பேசுவார் என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவாதத்தின் இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். இதையொட்டி நேற்று கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நடைபெற உள்ள துறைகளின் அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து