முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது: இந்தியாவில் 3,207 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 9 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 04

Source: provided

புதுடெல்லி : தினசரி பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது. இந்தியாவில் 3,207 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் புதிதாக 3,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் பாதிப்பு 3,805 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 3,451 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சரிந்துள்ளது. டெல்லியில் புதிதாக 1,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரியானாவில் 513, கேரளாவில் 381, மகாராஷ்டிரத்தில் 224, கர்நாடகாவில் 112 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 401 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 26 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று முன்தினம் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகாவில் தலா ஒருவர் என மேலும் 29 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,093 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 20,403 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது முன்தினத்தை விட 232 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 13,50,622 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 190 கோடியே 34 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 3,36,776 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.10 கோடியாக அதிகரித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!