முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபுஜித் நடிக்கும் போலாமா ஊர்கோலம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Prabu-Jit 2022 05 1

Source: provided

போலாமா ஊர்கோலம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய படத்தின் நாயகன் பிரபுஜித், தம்முடன் படித்தவர்களும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்களும் இணைந்து இப்படத்தை தயாரித்திருப்பதாகக் குறிப்பிட்டார். “தானும் இப்படத்தின் இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கமும் சினிமா மீதான காதலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டவர்கள். அவர் திறமை மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. தரமான படைப்பை வழங்கியிருக்கிறார் என உறுதியாகச் சொல்வேன். இந்தப் படத்தில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர். முன்னாள் வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி உள்ளது,” என்றார் பிரபுஜித். பின்னர் பேசிய மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், படத்துக்கு ‘போலாமா ஊர்கோலம்’ என்று தமிழில் தலைப்பு வைத்திருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். “இதில் 60 வயதிற்கு மேற்பட்ட 20 கால்பந்து வீரர்கள் நடித்திருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டும் தான். இவர்கள் வயதாகாத இளையர்கள்,” என்றார் ராஜன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!