முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      சினிமா
Dr Strange-Review 2022 05 1

Source: provided

மார்வல் படங்களுக்கு உலகம் முழுவதும் எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, ஓடிடி தளங்களில் படையெடுப்புகளுக்கு பின்பு இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.  ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் படம் எடுக்கப்பட்டு உள்ளது. டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்தில் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் எலிசபெத் ஓல்சன், சோஷிட்லா கோம்ஸ் போன்றோர் நடித்துள்ளனர்.  ஸ்பைடர்மேன் படங்களை எடுத்த சாம் ரைமி இந்த படத்தை இயக்கி உள்ளார்.  வாண்டா தனது கனவில் வரும் இரண்டு குழந்தைகளுடன் வாழ ஆசைப்படுகிறார்.  அவர்கள் வாழும் மற்றொரு உலகத்திற்கு சென்று அவர்களுடன் இருக்க விரும்புகிறார்.  இதனால் அமெரிக்கா சாவேஸிடம் உள்ள சக்திகளை பெற அவரை தேடி செல்கிறார் வாண்டா.   சாவேஸை தேடும் வாண்டாவிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற முயல்கிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.  இறுதியில் வாண்டா அந்த சக்திகளை பெற்றாரா? டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இதனை தடுத்தாரா என்பதே டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்-ன் கதை. முந்தைய மார்வல் படங்களைப் போலவே இந்தப் படத்திலும் காமெடி, சென்டிமென்ட்  டிராமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுத்துள்ளனர். இரண்டு மணி நேரம் ஓடும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம், கதையில் இருந்து விலகாமல் செல்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தில் இன்னும் சில மாஸ் காட்சிகளை வைத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து மெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் மார்வெல் ரசிகர்களை முழுவதும் திருப்தி படுத்தவில்லை என்றாலும் ஏமாற்றம் அடையாமல் செய்துள்ளது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து