முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கலவரம்- வன்முறை: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

புதன்கிழமை, 11 மே 2022      உலகம்
Sri-Lankan-riots 2022 05 11

Source: provided

கொழும்பு : இலங்கை வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீர் திருப்பமாக, பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். இதற்கிடையே, தலைநகர் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது போராட்டக்காரர்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 219 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்களால் 136 சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!