எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹெல்சிங்கி : நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்துக்கு பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனை போலவே ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தும் நேட்டோவில் சேர விரும்பியது.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு நேட்டோவில் சேர பின்லாந்து மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பின்லாந்து எம்பி.க்களில் பெரும்பாலானோர் அந்நாடு நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ, பிரதமர் சன்னா மரின் ஆகியோர் நேற்று கூட்டாக விடுத்த அறிக்கையில், நேட்டோவில் சேர விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்தின் பாதுகாப்பு வலுவடையும்.
இதுபோல் நேட்டோ உறுப்பினராக ஒட்டுமொத்த ராணுவக் கூட்டணியை பின்லாந்து வலுப்படுத்தும். நேட்டோ உறுப்பினர் ஆக பின்லாந்து தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் எடுக்கப்படும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


