முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ரவி ‘திடீர்’ டெல்லி பயணம்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
RN-Ravi 2022 01 04

Source: provided

சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை திரும்புகிறார். அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கவர்னரின் டெல்லி பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் டெல்லியில் கவர்னர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை (திங்கள்) சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி இருவரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!