முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை நடைபெறுகிறது ஆதி & நிக்கி திருமணம்

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
Adi-Nikki 2022 05 16

Source: provided

மிருகம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. கடைசியாக அவர் நடித்த க்ளாப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இவர் நிக்கி கல்ராணியுடன் “யாகாவாயினும் நா காக்க”, “மரகத நாணயம்” நடித்தார். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்த அவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்தச் சூழலில் அவர்களது திருமணம் (நாளை) மே 18ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து இருவரும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது பேசிய நிக்கி கல்ராணி “18ஆம் தேதி எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் ஆன பிறகு பெண்கள் மாற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவர்களாகவே இருந்தால் போதும். ஆனால் நல்லபடியாக இருக்க வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!