முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதற்கு "டிரிபிள் ஆர்" திட்டம் : அமைச்சர் துரைமுருகன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Dhuraimurugan 2022-05-17

Source: provided

சென்னை : தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12-ம் தேதி காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, 

ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர்.   இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்து விட்டு என்னை சென்று பார்வையிட வேண்டும் என பரிந்துரைத்தனர். எனவே இங்கு வந்து பார்த்த போது இந்த பூங்கா அற்புதமாக உள்ளது.   மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, ரூ. 2.23 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.  இதுதொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு உள்ளது. 

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கொரோனா, வெள்ளம் என இதிலே சென்று விட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது என்று கூறினார். மேலும் அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.  அதே போல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து