முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு எதிராக நடிகர் வீடியோ: நடவடிக்கை எடுக்காத டுவிட்டர் இந்தியாவுக்கு சம்மன்

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
modi-2021-12-28

Source: provided

புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அப்போது சிறுவன் ஒருவனுடன் மோடி உரையாடும் போது அந்த சிறுவன்  'ஜென்மபூமி பாரத்’ என்ற பாடலை பாடினான்.  இதனை, காமெடி நடிகர் குணால் கம்ரா  'ஜென்மபூமி பாரத்’ பாடலுக்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கான பாடலை மாற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

இதைத்தொடர்ந்து , சிறுவனின் தந்தை  அவரது டுவிட்டர் பதிவில் குணால் கம்ராவை சாடியதோடு மட்டுமல்லாமல் உங்கள் இழிவான அரசியலில் இருந்து என் மகனை தள்ளி வையுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மே 5-ஆம் தேதி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குணால் கம்ரா மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரியது.  

இருப்பினும் இதுவரை  எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையும் பெறப்படவில்லை என்பதால், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களுடன் ஆஜராக வேண்டும் என்று டுவிட்டர் கம்யூன்கேஷன் இந்தியா இயக்குநருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து