எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல்அறிந்த அவரது உறவினர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டு முன்பு குவிந்தனர். அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துக் கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பேரறிவாளனின் சகோதரிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர்.
31 ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வந்ததால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தந்தை குயில்தாசன் தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் மனிதநேய மிக்க அனைவருக்கும் நன்றி. தனது மகனின் 31 ஆண்டு சிறைவாசம் நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அவர்களே ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். நீதி நியாயம் வென்றது என்று அவர்கள் முழக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


