Idhayam Matrimony

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ஸ்டாலின் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார்.   

உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடித் தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர். நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச்சிறந்த ஊக்க சக்தியாக விளங்கும். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து