முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்

திங்கட்கிழமை, 23 மே 2022      உலகம்
Mano Ganesan 2022-05-23

Source: provided

இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 18 - ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்குக் கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் நேற்று முன் தினம் இலங்கைக்கு சென்றடைந்தது. இந்நிலையில் இந்த உதவிகளுக்கு இலங்கை எம்பி மனோ.கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு" என்பதற்கிணங்க காலமறிந்து செய்கின்ற உதவிகளுக்காக தமிழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக_முதல்வருக்கும் நன்றி. அரசு முறை வழிசமைத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமர் ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!