முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      இந்தியா
Kirankumar 2022 05 24

Source: provided

கொல்லம் : கேரள மாநிலத்தையே உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என்று அறிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நேற்று கொல்லம் நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவித்தது.

கேரளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கிய கொல்லம் விஸ்மயா வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், முக்கியத்துவம் மிக்க இந்த வழக்கில் நேற்று தண்டனை விவரத்தைத் தீர்ப்பாக வழங்கியது. 304பி பிரிவில் 10 ஆண்டு தண்டனையும் 306 பிரிவில் 6 ஆண்டு தண்டனையும் 498 ஏ பிரிவில் 2 ஆண்டு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரே காலத்தில் அனுபவிக்கலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் 12 லட்சத்து 55 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்புக்காக அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதனடிப்படையில் 23, மே திங்கள்கிழமை இந்தியத் தண்டனைச் சட்டம் 304 – பி (திருமணம் ஆகிய 7 ஆண்டுக்குள் நடக்கும் மரணம்) , 498 ஏ (கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துவது), 306 (தற்கொலைக்கு உடந்தையாக இருந்த்தல்) ஆகிய பிரிவுகளின் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் தண்டனையைக் குறைக்கும்படியாக கிரண்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். சூரியனுக்குக் கீழ் முதல் வரதட்சனை மரணம் அல்ல இது எனச் சொல்லி வாதிட்டுள்ளார். கிரண்குமாரும் தன் தர்ப்பு நியாயத்தைச் சொன்னார். தன் தந்தையும் தாயும் வயதானவர்கள். நோயாளிகள். என் வயதையும் கருத்தில்கொண்டு எனக்குக் குறைவான தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அரசுத் தரப்பு கிரண்குமாருக்குக் கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால் தண்டனையை குறைக்கக் கூடாது என வாதிட்டது. இதனிடையே தண்டனை அறிவிப்புக்காக அமர்வுக்கு சிறு இடைவேளை சொல்லிவிட்டு நீதிபதி அறைக்குச் சென்றுவிட்டார். பிறகு மீண்டும் கூடிய அமர்வு, கிரண்குமாருக்கான தண்டனையை அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!