முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு

புதன்கிழமை, 25 மே 2022      உலகம்
Ranil-Wickramasinghe 2022-0

Source: provided

கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மே 12-ம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறார்.  கடந்த  14-ம் தேதி 4 அமைச்சர்களும், 20-ம் தேதி 9 அமைச்சர்களும் பதவியேற்றனா். இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். இருப்பினும் நிதி அமைச்சர் பதவியை யாருக்கும் வழங்கவில்லை.

இந்நிலையில், நேற்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து