முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூரில் கட்டமைப்பு வசதிகள் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2022      ஆன்மிகம்
Sekarbapu 2022-05-31

Source: provided

சென்னை : திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு நேற்று  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

திருச்செந்தூர் கோவிலில் ரூ. 200 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். திருச்செந்தூர் கோவிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், திருப்பதி கோவிலுக்கு இணையா க்யூ கம்ப்ளக்ஸ் ஒன்றுகட்டி, அதன் வழியாக படிப்படியாக பக்தர்களை அனுப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஒரே நேரத்தில் 5000 பேர் வந்தால்கூட சமாளிக்கலாம் என்றே நினைக்கிறேன். இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி, திருத்தனி, ராமேஸ்வரம், பழனி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவில்களும் முக்கியத்துவம் பெறும் வகையில், பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரைபடம் தயாரித்து கொண்டிருக்கிறோம்  என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!