முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் : ஓ.பன்னீர் செல்வம் டுவிட்

புதன்கிழமை, 22 ஜூன் 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : அ.தி.மு.கவில் சர்வாதிகார மற்றும் அராஜக போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம், விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகியுள்ள நிலையில், மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.கவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜக போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கேசவன் தீக்குளிக்க முயன்றுள்ளார். 

அவர் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச்செயலாளராவார். அவர் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது போன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து