Idhayam Matrimony

தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
CM-1-2022-06-23

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர் என்றும், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டு உள்ளோம். இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை.அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. 

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். நாம் பெருமையுடன் பேசி கொண்டு உள்ளே திராவிட மாடலில் நடைபெறும் திருமணம் இது. அனைவரின் சார்பில் நான் மண மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து