முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.44 லட்சம் கோடி ரூபாய் : மத்திய நிதித் துறை அமைச்சகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
GST 2021 12 27

Source: provided

புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  கடந்த மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வசூலான நிலையில் ஜூன் மாத வசூல் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி), நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 1.44 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.92,800 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56 சதவீதம் அதிகமாகும்.

ஜூன் மாதத்தில் வசூலான ரூ.144,616 ஜி.எஸ்.டியில், மத்திய ஜி.எஸ்.டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜி.எஸ்.டியாக ரூ.32,406 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டியாக ரூ.75,887 கோடியும், செஸ் ரூ.11,018 கோடியும் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.68 லட்சம் கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடியும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஜி.எஸ்.டி வசூல் முறையே ரூ.1.33 லட்சம் கோடி மற்றும் ரூ.1,40,986 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!