முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
eknath-shind-2022-06-23

Source: provided

மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரும் திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அப்போது தனது தலைமையிலான கூட்டணி அரசின் பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே நிரூபிக்கிறார்.

முதல்வராக பதவியேற்பு...

மகாராஷ்டிரத்தில், பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே (58) நேற்று முன்தினம் இரவு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவை தலைவர் பதவி... 

இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருப்பதாகவும்,  இன்று முதல் தொடங்கவிருந்த 2 நாள் சிறப்புப் பேரவைக் கூட்டம் 3, 4 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இன்று அவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. நாளை  அவைத் தலைவர் தேர்வாகிறார். 4-ம் தேதி சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து...

முன்னதாக ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ஷிண்டேவுக்கும் ஃபட்னவீஸுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ஷிண்டே - பா.ஜ.க கூட்டணி பலம்:

1) பா.ஜ.க - 106.

2) ஷிண்டே அணி - 39.

3) சுயேச்சை - 13.

4) ஸ்வாபிமான் பக்ஷ் - 1.

5) ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷ் - 1.

6) ஜன் ஸ்வராஜ் கட்சி - 1.

7) மொத்தம் - 161

(பெரும்பான்மை பலம் - 145)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!