முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை : வைத்திலிங்கம் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Vaithilingam-2022-06-24

Source: provided

சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும், வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை. தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. அ.தி.மு.க. பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலின்றி கூட்டப்படும் பொதுக்குழு செல்லாது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!