முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      இந்தியா
Eknath-shind-2022-07-03

Source: provided

மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணியினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு, பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து ஷிண்டே தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. 

இதற்காக காலையிலேயே சட்டசபைக்கு வந்த ஷிண்டே அணியினர், சட்டசபை கட்சி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். 'சிவசேனா சட்டமன்றக் கட்சியின் அறிவுறுத்தலின்படி அலுவலகம் மூடப்பட்டுள்ளது' என வெள்ளை பேப்பரில் எழுதி கதவில் ஒட்டினர். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கான ஆதரவை தெரிவிப்பதற்காக ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் மும்பை வந்து சேர்ந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து