எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டேராடூன் : உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்போது பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால், பல்வேறு இடங்களில் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் தொடா்கின்றன.
சமோலி மாவட்டத்தின் நந்தாநகா் பகுதியில் உள்ள குந்தரி லகாபாலி, குந்தரி லகாசா்பானி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சேறுடன் உருண்டு வந்த பாறைகளால், வழியில் இருந்த வீடுகள், கடைகள் உள்பட அனைத்தும் சேதமடைந்தன. இதேபோல், மோக் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த பலத்த மழையால் மோக்ஷா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரங்களில் ஏற்பட்ட அரிப்பால், துா்மா, சேரா ஆகிய கிராமங்களில் வீடுகள்-கடைகள் இடிந்து விழுந்தன. மேற்கண்ட கிராமங்களில் 20 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
இடிபாடுகளில் புதைந்தவா்களில் ஒருவரின் உடல் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை சமோலி மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி நந்தநகரில் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


