முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் வரும் வாரம் விசாரணை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் போராட்டம் கலவரமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

00000000000

தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.38,480-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து  ரூ.4810-க்கு விற்பனையானது. வெள்ளி  ஒரு கிராம் 50 பைசா உயர்ந்து ரூ.64 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.500 உயர்ந்து ரூ.64,000 ஆகவும் விற்பனையானது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி) 1 கிராம் தங்கம் 4,810, 1 சவரன் தங்கம் - 38,480, 1 கிராம் வெள்ளி - 64.00, 1 கிலோ வெள்ளி 64,000.

000000000000000000

அமெரிக்காவில் விற்பனையாகும் கறிவேப்பிலையின் விலை தெரியுமா?

நம்மூர் காய்கறி கடைக்கு காய்கறி வாங்க சென்றால் அதற்கு கொசுறு போல வியாபாரிகள் கறிவேப்பிலை கொடுப்பார்கள். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் இதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் காசு வாங்குவதும் உண்டு. இந்த கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கட்டு கறிவேப்பிலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும். மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கி உள்ளார். அதன்படி பன்னீர் பாக்கெட் ரூ393-க்கும், வீட்டை பெருக்கும் துடைப்பம் ஒன்று ரூ 472, 92-க்கும், ஒரு கொத்து கறிவேப்பிலை இந்திய ரூபாய் மதிப்பில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.

000000000000000000000

வீட்டு கிணற்றில் மாயமான 18 அடி நீர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர் புகார் 

 தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்ற நடிகர் வடிவேலுவின் காமெடி போல கேரளாவில் கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என வீட்டு உரிமையாளர் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்விபரம் வருமாறு:- கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சேர்ப்பு, வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீசன். இவரது வீட்டின் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை தான் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தார். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். 

ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை அதில் அமைக்கப்பட்டுள்ள அளவு கருவி மூலம் சதீசன் பார்ப்பது வழக்கம். அதன்படி காலையில் சதீசன் கிணற்றின் தண்ணீர் இருப்பை பார்த்தார். அதில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்தது. கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சதீசன், இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து