முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      ஆன்மிகம்
Amarnath 2022-07-05

Source: provided

புதுடெல்லி : மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் குகைக் கோயிலை நோக்கிப் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பல்தால் முகாமிலிருந்து பக்தர்கள் அமர்நாத் குகை கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த வகையில், இதுவரை சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

இந்நிலையில் மோசமான வானிலை காரணாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று 6,351 பக்தர்கள் அமர்நாத் கோயிலுக்கு புறப்படத் தயாராக இருந்தநிலையில் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வானிலை சீரடைந்ததும், இவர்கள் அமர்நாத் நோக்கி புறப்படுவார்கள்.

அமர்நாத் பனிக்குகை நோக்கிய 43 நாட்கள் பயணம், காஷ்மீரில் உள்ள இருமுகாம்களில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 30) தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முடிவடைகிறது. அமர்நாத் யாத்திரைக்கு 3 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பதிவுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுடைய பயணத்தைக் கண்காணிக்க, ரேடியோ அலைவரிசை அடையாளமுறையை நிகழாண்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

முகாம்கள் மற்றும் தங்குமிடங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து