எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீடு...
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.
அமைதியாக நடந்தது...
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன், கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால், கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.
ஒத்துழைப்பு தரவில்லை...
உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த, அவர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை. கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அ.தி.மு.க அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒப்புதல் கடிதம் மூலம்...
கடந்த ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்துவிட்டார். எனவேதான், அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார். வரும் 11-ல் நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
தடை கோருகிறார்...
இந்நிலையில்தான், தனக்குப் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இ.பி.எஸ். மனுவில் தெரிவித்திருந்தார்.
தலையிட விரும்பவில்லை...
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தினேஷ், மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூலை 6) காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் "ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை, கூட்டத்தை நடத்தலாம். ஆனால், இடைப்பட்ட நாள்களில் யாருக்காவது நிவாரணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி அமர்வை அணுகலாம்.
இடைக்கால தடை...
23 தீர்மானங்களை தவிர்த்த மற்ற தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில், தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
எம்.என்.ராஜம்- எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Feb 2026சென்னை, தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி
-
சட்டப்பேரையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
16 Feb 2026சென்னை, சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப். 21ல் கனமழை பெய்ய வாய்ப்பு
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் வரும் பிப்.
-
தமிழ்நாட்டில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
ரூ.542.02 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Feb 2026சென்னை, ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
16 Feb 2026புதுச்சேரி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது ஏப.7 முதல் விசாரணை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு
16 Feb 2026புதுடெல்லி, சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் த
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியா மிக சரியான இடம்: ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
16 Feb 2026நியூயார்க், உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாள
-
ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: இந்திய தேர்தல் ஆணையம் நூதன முறையில் பிரச்சாரம்
16 Feb 2026டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
-
புது டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு தொடக்கம்: ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
16 Feb 2026புது டெல்லி, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஏ.ஐ.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Feb 2026- ஶ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமானுக்கு திருக்கல்யாணம்.
- நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் லட்ச தீபம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Feb 2026


