முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுபுருக்கு கொலை மிரட்டல்: ஆஜ்மீர் தர்கா மதகுரு கைது

புதன்கிழமை, 6 ஜூலை 2022      இந்தியா
Salman-Syst 2022-07-06

Source: provided

ஆஜ்மீர் : முஸ்லிம்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தினை அவதூறாக விமர்சித்த பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாள நுபுர் சர்மாவுக்கு ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்கா மதகுரு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சல்மான் சிஸ்டி என்ற அந்த மதகுரு வெளியிட்ட வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை வெட்டும் நபருக்கு எனது வீட்டைப் பரிசாக அளிப்பேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து போலீஸார் சல்மான் சிஸ்டியை கைது செய்துள்ளனர். அவர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது., நபிகள் நாயகத்தை அவமதித்த காரணத்துக்காக நுபுர் சர்மாவை நானே சுட்டுக் கொலை செய்திருப்பேன். ஆனால், இப்போது கூறுகிறேன், அவருடைய தலையை யார் கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு எனது வீட்டை பரிசாக அளிப்பேன். உலகின் முஸ்லிம் நாடுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதனை ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்காவில் இருந்து கூறுகிறேன். 

இந்த வீடியோவை கண்டிப்பதாக ஆஜ்மீர் தர்காவின் தலைமை குரு தீவான் ஜைனுள் அப்தீன் அலி கான் கூறியுள்ளார். ஆஜ்மீர் தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளம். அதை யாரும் சிதைக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவர், இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி உதய்பூர் சம்பவத்தை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நுபுர் சர்மாவின் பேச்சை ஆதரித்ததற்காகவே ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்டார். இப்போது ராஜஸ்தானின் ஆஜ்மீரில் இருந்து நுபுர் சர்மாவுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து