முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஜோபைடன்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      உலகம்
biden------------2022-07-28

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். 

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். 

இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறுகையில், அதிபர் ஜோபைடனுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கி விட்டன என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து