முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெஜன்ட் விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Legend-review 2022 07-31

Source: provided

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தரும் மருந்தைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் புகழ் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணன் என்ற ஒரு விஞ்ஞானியின் கதை தான் லெஜென்ட் படத்தின் கதை. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்து நிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் படம் தி லெஜண்ட். அறிமுக நாயகனான சரவணன் தனது முதல் படம் என்பதால் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை. கீதிகா திவாரி, ஊர்வசிரட்டேலா, யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் லெஜென்ட் நாயகனுக்கு உதவியிருக்கிறார்கள். விஜயகுமார், பிரபு, விவேக், யோகிபாபு, மன்சூர் அலிகான், வம்சி, சுமன்,ரோபோ சங்கர், முனீஸ்காந்த் உட்பட ஏராளமான நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகமே, இயக்கம் ஜேடி ஜெர்ரி. கேட்டதை அள்ளிக் கொடுக்கும் தொழிலதிபர் ஒருவரை வைத்து படம் எடுத்து வெற்றியை தவற விட்டு விட்டார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள். ஆனாலும் நடன இயக்குனருக்கும் கலை இயக்குனருக்கும் நமது பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து