முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறு உத்தரவு வரும் வரை சிவசேனா விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      இந்தியா
sivasena- 2022 08 04

Source: provided

புது தில்லி: சிவசேனா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சிக்கு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே உரிமைக் கோரும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசியல் குழப்ப வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி திங்களன்று (ஆகஸ்ட் 8) நீதிமன்றம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிவசேனாயில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். இந்நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அரசமைப்பு சட்டம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக, சிவசேனா அதிருப்தி அணியினர் தங்களது பதில்களை மாற்றியமைத்து தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து