முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      விளையாட்டு
Shreyas-rohit

Source: provided

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன போதிலும், ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார் ரோஹித் சர்மா. இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதற்கிடையே, பேட்டிங் செய்யும் ரோஹித் சர்மாவுக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு ரன்னை வேகமாக ஓடி எடுக்க ரோஹித் சர்மா முயன்ற போது, ஐயர் “நோ” சொல்லி பின்வாங்கினார். இதனால் டென்ஷன் ஆன ரோஹித் சர்மாவுக்கும் ஐயருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. 

அதன் விவரம் வருமாறு.,

ரோஹித்: ஷ்ரேயாஸ், இதில் ஒரு ரன்னை எடுத்து இருக்கலாம்.

ஐயர்: நீங்கள் கூப்பிடுங்கள், அதன்பிறகு என்னை பார்க்காதீர்கள்.

ரோஹித்: நீ தான் முதலில் கூப்பிட்டு இருக்க வேண்டும், அவர் 7வது ஓவரை வீசுகிறார்.

ஐயர்: அவர் எந்த கோணத்தில் ஓடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை... நீங்களே கூப்பிடுங்கள்.

ரோஹித்: என்னால் கூப்பிட முடியாது.

ஐயர்: அது (பந்து) உங்கள் முன்னால்தான் இருக்கிறது.

இவ்வாறு இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து