எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதற்கிடையே முதல் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆகி இருப்பது கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலியின் கிரிக்கெட் கரியரில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும். அடிலெய்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டாஸில் தொடரும் சோகம்
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை. கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.
இதேபோல மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது. ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.
ஸ்மிருதி மந்தனா சதம்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து அசத்தியுள்ளார். மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், நவி மும்பையில் உள்ள மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று (அக். 23) மோதின. இந்த நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் 30 ஓவர்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்டமிழக்காமல் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 88 பந்துகளில் 100 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும், அவருடன் விளையாடி வரும் வீராங்கனை பிரத்திகா ராவல் 96 பந்துகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். இவர்கள் இருவரது கூட்டணியின் மூலம் 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்களை குவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


