முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு  விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிப்பதற்காக மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பெய்து வருகின்ற தொடர் கனமழையின் காரணமாகவும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி உள்ளன. பருவமழையால் மழையில் நெல் நனைந்துள்ளதால் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பருவமழை காலம் என்பதால் 17 சதவீத ஈரப்பத அளவில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. 

இதனை தொடர்ந்து, நெல்லின் ஈரப்பதத்தை, 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய உணவுத் துறைக்கு, தமிழக உணவுத் துறை வாயிலாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 குழுவிலும் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குழுக்கள் ஆய்வு செய்து நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளும். அதன்படி, 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழகம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து