முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி - 2022 பாரா டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் பவினா

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
common-wealth-1-------2022-08-05

Source: provided

8-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சூ பெய்லியை நேற்று எதிர்கொண்டார். 

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

____________

மல்யுத்தம் - 4 போட்டியாளர்கள் 

அரையிறுதிக்கு முன்னேற்றம் 

இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளன. இதில் நேற்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் தீபக், பஜ்ரங் புனியா ஆகியோர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் தீபக் புனியா, ஷேகு கசெக்பாமாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல் முன்னணி வீரர் பஜ்ரங் புனியா காலிறுதியில் எளிதாக வெற்றி பெற்றார். 

அதே போல் பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இங்கிலாந்தின் கெல்சி பார்ன்ஸை வீழ்த்தி இந்தியாவின் சாக்சி மாலிக் அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு வீராங்கனை அன்ஷு மாலிக் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

_____________

பேட்மிண்டன் : ஸ்ரீகாந்த் 

காலிறுதி சுற்றுக்கு தகுதி

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டாவை சேர்ந்த டேனியல் வனாகலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இலங்கையை சேர்ந்த துமிந்து அபேவிக்ரமாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-9, 21-12 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

____________

உயரம் தாண்டுதலில் சாதனை 

படைத்த தேஜஸ்வின் சங்கர் 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

தேஜஸ்வின் சங்கர். மகளிருக்கான ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளி வென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட்டில் மாலத்தீவுகளின் பாத்திமத் நபாஹாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

___________

பாரா பளு தூக்குதலில் 

தங்கம் வென்றார் சுதிர்

7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வ-து தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும். இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

_____________

அரையிறுதியில் இந்திய 

ஆடவர் ஹாக்கி அணி 

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்ட முடிவில் 4-1 என வேல்ஸை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா. ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். 

மற்றொரு கோலை குர்ஜந்த் சிங் அடித்தார். 4 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள், ஒரு டிரா என 10 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது.  சனிக்கிழமையன்று நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து