முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூட் தேர்வுக்கான புதிய தேதி: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
School 2022-08-07

Source: provided

புதுடெல்லி : கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக் கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதி காலையிலும், மாலையிலும் 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகளால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வு 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலையில் நடக்க இருந்த தேர்வு, மொத்தம் உள்ள 489 மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 2-வது நாளாக தொழில்நுட்ப குளறுபடியால் தேர்வு பாதிக்கப்பட்டது. ஆனால், காலையில் 95 சதவீத மையங்களில் தேர்வு சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. எனினும், நாடு முழுவதும் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவு தேர்வானது 2-வது நாளாக 50 மையங்களில் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்தியில், நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக, தேர்வானது வருகிற 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது. இதற்காக தேர்வு எழுதுபவர்களுக்கு புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்டு 4 முதல் 6 வரையிலான நாட்களில் நடைபெற இருந்த 2-வது கட்ட தேர்வு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக சில மையங்களில் ஒத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, அந்த தேர்வுகள் ஆகஸ்டு 12-14 ஆகிய நாட்களில் நடைபெறும் என முன்பு அறிவித்தோம். எனினும், தேர்வு எழுதுபவர்களில் பலர் எங்களை அணுகி, அந்த நாட்களில் தேர்வை நடத்த வேண்டாம் என்றும், தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகின்றன என்றும் தெரிவித்தனர். அதனால், அந்த தேர்வுகளை வரும் 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிக்கு முன்பு அதற்கான புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து