Idhayam Matrimony

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்த 3 மாதத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும்: கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Kejriwal 2021 08 04

Source: provided

அகமதாபாத் : குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

குஜராத் சென்றுள்ள கெஜ்ரிவால் கூறியதாவது, 

மின்சாரம் தொடர்பாக முதல் வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் துயரத்தில் உள்ளனர். மின் கட்டணமும் அதிகமாக உள்ளது. டெல்லியில் இலவச மின்சாரம் அளித்து வருகிறோம். பஞ்சாபில், 25 லட்சம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் ஏதும் வரவில்லை. விரைவில் 51 லட்சம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் பூஜ்யம் என்ற நிலை ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், முந்தைய மின்சார கட்டணமும் ரத்து செய்யப்படும். ஆட்சி அமைத்த 3 மாதத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும். 

இங்குள்ள இளைஞர்கள் வாழ்வாதாரத்தை தொடர சிரமப்படுகின்றனர். சில ஆண்டுகளில் டெல்லியில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம். இங்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

அதுவரை வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர திட்டமும் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் டெல்லியில் உள்ளது போன்ற பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து