முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்கொரியாவில் கனமழை: 7 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      உலகம்
South-Korea 2022-08-09

Source: provided

சியோல் : தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் 7 பேர் பலியாகியுள்ளனர். கனமழைக்கு வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் சுரங்கப் பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள கியோங்கி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு மணிக்கு 100 மி.மீ அதிகமான கனமழை பெய்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு உயிரிழந்த ஏழு பேரில் 5 பேர் சியோலில் இருந்தும், மீதமுள்ள இருவர் கியோங்கியில் இருந்தும் பதிவாகியுள்ளன. தலைநகரில் 4 பேரும், மாகாணத்தில் இருவரும் காணாமல் போயுள்ளனர். 

கியோங்கியில் ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் தலைநகர் பகுதியில் உள்ள 107 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் தங்கள் வீடுகளை இழந்து பள்ளிகள் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சியோல், இஞ்சியோன் உள்ளிட்ட எட்டு ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் சில ரயில்வே மற்றும் சுரங்கப்பாதை பிரிவுகளில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து