முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை, காலிமுகத்திடலில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் சம்மதம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Sri-Lanka 2022-08-10

Source: provided

கொழும்பு : இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார். இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர்.

இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கேயே தொடர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக நேற்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து